Fact Check: யேசுதாஸின் பேத்தி பாடும் பாடல் என வைரலாகும் காணொலி? உண்மை என்ன?

யேசுதாஸின் பேத்தி ஆமேயா பாடல் பாடியதாக கூறி சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
யேசுதாஸ் பேத்தி பாடும் பாடல்
யேசுதாஸ் பேத்தி பாடும் பாடல்
Published on
1 min read

“கே ஜே யேசுதாஸ் மகன் விஜய் இயேசுதாசின் மகள் ஆமேயா யேசுதாஸ்” என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவர் பாடும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில் இருக்கும் பெண் பிரபல பாடகர் யேசுதாஸின் பேத்தி அமோயா என்று கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அதில் இருப்பவர் பாடகி ஸ்ரீலலிதா என்பதும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Rajpal_BJP என்ற எக்ஸ் பயனர் கடந்த மே 26ஆம் தேதி வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், “ஸ்வாமி வேதாந்த தேசிகா இயற்றிய ரகுவீர கத்யத்தை பாடும் பாடகி ஸ்ரீலலிதா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Srilalitha Bhamidipati என்ற பெயரில் இயங்கும் ஸ்ரீலலிதாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அதில், வைரலாகும் காணொலியை கடந்த மே 11ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில், “ராமரைப் பற்றிய இந்த அற்புதமான ரகுவீர கத்யத்தை வழங்குகிறேன். அதனைக் கேட்டு உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, யேசுதாசின் பேத்தி ஆமேயா குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ஆமேயா புகைப்படத்துடன் 2020ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி Mathrubhumi செய்தி வெளியிட்டிருந்தது. அதன்மூலம், செய்தியில் புகைப்படத்தில் இருப்பவரும் வைரலாகும் காணொலியில் இருப்பவரும் வெவ்வேறானவர்கள் என்பது தெரியவந்தது.

Conclusion:

முடிவாக நம் தேடலில் யேசுதாஸின் பேத்தி ஆமேயா பாடும் பாடல் என்று வைரலாகும் காணொலியில் இருப்பவர் பாடகி ஸ்ரீலலிதா என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in