ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் ஆசீர்வாத் மாவு 
Tamil

ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் ஆசிர்வாத் மாவு; வைரலாகும் புகைப்படத்திற்கு விளக்கமளித்த ஆசீர்வாத் நிறுவனம்!

இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் மாவில் ஹலால் முத்திரை பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“ஆசிர்வாத் ஆட்டா கலால்(ஹலால்) முத்திரை போட்டு இருக்கு… இன்று முதல் எச்சில் துப்பிய இந்த மைதா மாவை வாங்குவதை நிறுத்திவிடுகிறேன்… ஆசிர்வாத் ஆட்டாவை ஹிந்துக்கள் புறக்கணிப்போம்… ஜெய்ஸ்ரீராம்” என்ற தகவலுடன் ஆசிர்வாத் மாவின் கவரில் ஹலால் முத்திரை இருப்பதாக வலதுசாரியினர் பலரும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படம்

Fact-check:

பரவி வரும் இத்தகவல் உண்மைதானா என்பதைக் கண்டறிய ஆசிர்வாத் ஆட்டாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலினுள் “halal” என்ற கீவர்ட் பயன்படுத்தி தேடினோம். அப்போது, ஆசீர்வாத் ஆட்டாவின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து TweetKaregaAmit என்ற பயனர் வைரலாகும் தகவலை எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்திருந்த சிர்வாத் ஆட்டா, “ஹலால் முத்திரையுடன் இந்தியாவில் ஆசிர்வாத் அட்டா விற்கப்படுவதாக முற்றிலும் தவறான செய்தி பரப்பப்படுகிறது.  இதில் காட்டப்பட்டுள்ள பேக்கிங் மிகவும் பழையது மற்றும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும், இது இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படுவது இல்லை.

ஆசீர்வாத அட்டா ஹலால் முத்திரையுடன் விற்கப்படுவதாகக் பகிரப்படும் இதுபோன்ற தவறான செய்திகள் யாருக்கும் உதவாது.  எனவே, இதுபோன்ற செய்திகளை வெளியிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று விளக்கியுள்ளனர். தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அமேசான் தளத்தில் ஆசிர்வாத் மாவு குறித்து தேடியபோது, அவற்றில் ஹலால் முத்திரை இருப்பது தெரியவந்தது. அதே, இந்தியாவிற்கான அமேசான் தளத்தில் விற்கப்படும் ஆசிர்வாத் மாவில் ஹலால் முத்திரை இல்லை என்பதும் தெளிவாகிறது.

இரு நாடுகளிலும் விற்கப்படும் ஆசீர்வாத் மாவு

Conclusion:

நம் தேடலின் முடிவாக, இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் மாவில் ஹலால் முத்திரை இல்லை என்றும் உண்மையில் ஏற்றுமதி செய்யப்படும் ஆசிர்வாத் மாவில் மட்டுமே ஹலால் முத்திரை பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Humayun Kabir’s statement on Babri Masjid leads to protest, police action? Here are the facts

Fact Check: താഴെ വീഴുന്ന ആനയും നിര്‍ത്താതെ പോകുന്ന ലോറിയും - വീഡിയോ സത്യമോ?

Fact Check: சென்னையில் அரசு சார்பில் ஹஜ் இல்லம் ஏற்கனவே உள்ளதா? உண்மை அறிக

Fact Check: ಜಪಾನ್‌ನಲ್ಲಿ ಭೀಕರ ಭೂಕಂಪ ಎಂದು ವೈರಲ್ ಆಗುತ್ತಿರುವ ವೀಡಿಯೊದ ಹಿಂದಿನ ಸತ್ಯವೇನು?

Fact Check: శ్రీలంక వరదల్లో ఏనుగు కుక్కని కాపాడుతున్న నిజమైన దృశ్యాలా? కాదు, ఇది AI-జనరేటెడ్ వీడియో