சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மரியாதை செலுத்திய எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 
Tamil

Fact Check: மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வணக்கம் செலுத்தினரா?

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வணக்கம் செலுத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உறவினர்கள் சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். இதனிடையே, அவரது உடலுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வணக்கம் செலுத்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் தவறானது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, pikabu என்ற ரஷ்ய மொழி இணையதளம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைரலாகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், “கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 41 வயது மருத்துவர் ஜாவோ ஜு, திபெத் தன்னாட்சிப் பகுதியான ஷானனில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மற்ற மருத்துவர்களின் குழுவுடன் பணிபுரிய முன்வந்தார்.

ஆனால், அவரது சேவையின் பாதியில், தலைவலி மற்றும் தலைச்சுற்றலை அனுபவிக்கத் தொடங்கினார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளை அனீரிஸம் இருப்பது கண்டறியப்பட்டது, அதன் காரணமாக அவர் மரணமடைந்தார். ஜாவோவின் குடும்பத்தினர் அவரது இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்களை தானமாக வழங்கினர். அன்ஹுய் மாகாணத்தின் தலைநகரான ஹெஃபியில் உள்ள மருத்துவமனையில் சக மருத்துவர்கள் ஜாவோவுக்கு குணிந்து மரியாதை செலுத்துவதை இப்புகைப்படம் காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான CGTN வைரலாகும் புகைப்படத்துடன் இதே தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.

CGTN வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

நம் தேடலில் முடிவாக மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வணக்கம் செலுத்தியதாக வைரலாகும் புகைப்படம் தவறானது என்றும் உண்மையில் அது 2016ஆம் ஆண்டு உயிரிழந்த சீனாவைச் சேர்ந்த மருத்துவரின் உடலுக்கு சக மருத்துவர்கள் மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Manipur’s Churachandpur protests see widespread arson? No, video is old

Fact Check: നേപ്പാള്‍ പ്രക്ഷോഭത്തിനിടെ പ്രധാനമന്ത്രിയ്ക്ക് ക്രൂരമര്‍‍ദനം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அரசியல், பதவி மோகம் பற்றி வெளிப்படையாக பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை அறிக

Fact Check: ಮೈಸೂರಿನ ಮಾಲ್​ನಲ್ಲಿ ಎಸ್ಕಲೇಟರ್ ಕುಸಿದ ಅನೇಕ ಮಂದಿ ಸಾವು? ಇಲ್ಲ, ಇದು ಎಐ ವೀಡಿಯೊ

Fact Check: నేపాల్‌లో తాత్కాలిక ప్రధానిగా బాలేంద్ర షా? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి