நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் 2025ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட காணொலியை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது என்பது தெரிய வந்தது.
புகைப்படத்தின் உண்மைத் தன்மை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்திய போது Money Control என்ற ஊடகம் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் காணொலியில் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது.
அதில், "முதல்வர் ஸ்டாலின் முதல் ரேவந்த் ரெட்டி வரை: நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணொலியில் 22வது வினாடி முதல் கடைசி வினாடி வரை பிரதமர் மோடியுடன் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாடிய பகுதி இடம் பெற்றுள்ளது. அதில், எங்குமே முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் காலில் விழுந்ததாக காட்சிகள் இடம்பெறவில்லை.
தொடர்ந்து வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் ஸ்டாலினின் உருவம் சற்று உடல் பருமனாக இருப்பவரைப் போன்று உள்ளது தெரியவந்தது. இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதற்கான அடையாளமாக உள்ளது. இதனையடுத்து, Decopy.ai என்ற இணையதளத்தில் தனித்தனியாக பதிவேற்றி ஆய்வு செய்தபோது ஒன்று 84% மற்றொன்று 98% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தன.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படம் தவறானது என்றும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிய வந்தது.