பிறப்பால் மட்டுமே தான் ஒரு இந்து என்று கூறிய ஜவஹர்லால் நேரு 
Tamil

Fact Check: கலாச்சாரத்தால் ஒரு முஸ்லிம், பிறப்பால் மட்டுமே நான் ஒரு இந்து என்று கூறினாரா ஜவஹர்லால் நேரு?

பிறப்பால் மட்டுமே நான் ஒரு இந்து, அறிவியலால் நான் ஆங்கிலேயன், கலாச்சாரத்தால் ஒரு முஸ்லிம் என்றெல்லாம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“அறிவில் நான் ஒரு ஆங்கிலேயன், பார்வையில் ஒரு சர்வதேசியவாதி, கலாச்சாரத்தால் ஒரு முஸ்லீம் மற்றும் தற்செயலாக, பிறப்பால் மட்டுமே இந்து” என்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக சமூக வலைதளங்களில் (Archive) வலதுசாரியினர் டெக்கான் குரோனிக்கல் ஊடகம் வெளியிட்ட செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் இந்து மகாசபையின் தலைவர் என். பி. காரே கூறியது என்று தெரியவந்தது.

உண்மையில் ஜவஹர்லால் நேரு இவ்வாறு கூறினாரா என்பதை கண்டறிய கூகுளில் இது தொடர்பாக கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது “ஜவஹர்லால் நேரு மற்றும் மோதிலால் நேரு புத்தகங்களை தவிர மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான பி. ஆர். நந்தா எழுதிய "The Nehrus: Motilal and Jawaharlal” புத்தகத்தில் இந்து மகாசபையின் தலைவரான என்‌.பி. காரே, “ஜவஹர்லால் நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாக, பிறப்பால் ஒரு இந்து” என விவரித்ததாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி. ஆர். நந்தா எழுதிய "The Nehrus: Motilal and Jawaharlal” என்ற புத்தகம்

தொடர்ந்து தேடுகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயலாளர் Gaurav Pandhi 2018ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தனது எக்ஸ் பதிவில், டெக்கான் குரோனிக்கல் ஊடகம் ஹைதராபாத் பதிப்பில் 2018ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி 12ஆம் பக்கத்தில் நேருவைப் பற்றிய தவறான மேற்கோள் இடம்பெற்றுள்ளது என்று வைரலாகும் தகவலை சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், அவர் 1950ல் இந்து மகாசபையின் தலைவரான என்.பி. காரே தான் இக்கூற்றைக் கூறினார். எனவே, தவறாக செய்தி வெளியிட்ட டெக்கான் குரோனிக்கல் ஊடகம் மன்னிப்பு கேட்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பதிவில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எழுதிய Nehru: The Invention of India என்று புத்தகம் ஆதாரமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்புத்தகத்தில் தேடுகையில், "நேரு படிப்பால் ஒரு ஆங்கிலேயன், கலச்சாரத்தால் ஒரு முஸ்லீம், தற்செயலாக பிறப்பால் ஒரு ஹிந்து " என என்.பி. காரே நேரு குறித்து கூறிய கூற்று இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக, டெக்கன் கிரானிக்கல் ஊடகமும் தன் தவறை உணர்ந்து நவம்பர் 18ஆம் தேதி 9வது பக்கத்தில் இக்கூற்று என்.பி. காரேவால் கூறப்பட்டது என்ற விளக்கத்தை அளித்துள்ளதாக Gaurav Pandhi தனது எக்ஸ் பதிவில் மேற்கோள்காட்டி உள்ளார்.

இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் எம்பி சசி தரூர், “இது முற்றிலும் தவறான மேற்கோள். இந்து மகாசபையின் என்.பி. காரே கூறியதை நேரு கூறியதாக பொய்யாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று 2018ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் அறிவில் நான் ஒரு ஆங்கிலேயன், பார்வையில் ஒரு சர்வதேசியவாதி, கலாச்சாரத்தால் ஒரு முஸ்லீம் மற்றும் தற்செயலாக, பிறப்பால் மட்டுமே இந்து என்று ஜவஹர்லால் நேரு கூறியதாக வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் அது இந்து மகாசபையின் தலைவரான என். பி. காரே நேரு குறித்து கூறிய கூற்றாகும்.

Fact Check: Humayun Kabir’s statement on Babri Masjid leads to protest, police action? Here are the facts

Fact Check: താഴെ വീഴുന്ന ആനയും നിര്‍ത്താതെ പോകുന്ന ലോറിയും - വീഡിയോ സത്യമോ?

Fact Check: சென்னையில் அரசு சார்பில் ஹஜ் இல்லம் ஏற்கனவே உள்ளதா? உண்மை அறிக

Fact Check: ಜಪಾನ್‌ನಲ್ಲಿ ಭೀಕರ ಭೂಕಂಪ ಎಂದು ವೈರಲ್ ಆಗುತ್ತಿರುವ ವೀಡಿಯೊದ ಹಿಂದಿನ ಸತ್ಯವೇನು?

Fact Check: శ్రీలంక వరదల్లో ఏనుగు కుక్కని కాపాడుతున్న నిజమైన దృశ్యాలా? కాదు, ఇది AI-జనరేటెడ్ వీడియో