fifthestatedigital1
Tamil

Fact Check: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் முதல்வர் விஜய்யை விமர்சித்ததற்காக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டாரா? உண்மை அறிக

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷமிட்டதற்காக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது

Southcheck Network

முதல்வர் விஜய்யை அவதூறாக மிரட்டல் விடும் தூணியில் பேசியதற்காக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விளாத்திகுளம் திமுக எம் எல் ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், “விளாத்திகுலம் MLA மார்கண்டேயன் பையந்தான் இவரு.. MLA மார்க்கண்டேயனை எதுக்காக target பண்ணி கைது பண்ணாங்கன்னு இப்ப தெரியுதா??? மேலிடத்து உத்தரவு…” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது. அதில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் ஏதோ முழக்கம் இடுவதும் அவரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அவர் பேசும் காட்சி உள்ளது. அதில், “முதலமைச்சர் அவர்கள் இந்த மாநிலத்திற்கும் நாட்டிற்கும் குரலாக மாபெரும் பாதுகாப்பு கவசமாக அமைந்திருக்கிறார். அவருடைய குரல் தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்றக்கூடிய குரலாக அமைய இருக்கிறது. இந்நிலையில் சட்டக் கல்லூரி மாணவனான நான் இன்று காலை செய்தித்தாள் வாசித்த போது நீதிபதி அவர்கள் பாசிச கருத்துக்களை தனது சொந்த கருத்துக்களை தீர்ப்பில் குறிப்பிட்டது போன்று எனக்குத் தெரிந்தது.

என்னால்தான் அந்த தீபத்தை ஏற்ற முடியவில்லை, இதனைக் கண்டு நான் கவலை அடைந்தேன். இச்சூழலில் முதல்வர் அவர்கள் தைரியமான ஒரு ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டிருந்தார். என்ன ஆனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருந்தார் அந்த தைரியத்தில் தான் நான் இந்த கோஷத்தை எழுப்பினேன்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் குறித்து எம்எல்ஏ மகன் பேசிய காரணத்தால் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார் என்பது போன்ற இந்த காணொலியை பரப்பி வருகின்றனர்.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்றும் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டதும் தெரிய வந்தது. 

வைரலாவும் காணொலியின் உண்மை தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை விவசாயம் செய்து பார்த்தபோது, வைரலாகும் காணொலியை தினமலர் ஊடகம் செய்தியாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தது. அதில், திமுக எம்எல்ஏ மகன் எழுப்பிய கோஷம் என்ன என்று 2025 ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் தேதி காணொலி பதிவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வைரலாகும் தகவல் பழையது என்றும் திமுக ஆட்சியின் போது எடுக்கபட்டது என்றும் தெரியவந்தது.

தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அதே தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின்போது ஆர்ப்பாட்டம் செய்தது முதலமைச்சருக்கு எதிராக அல்ல என்று திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் மகன் அக்‌ஷய் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பையும், அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியையும் கண்டித்து மட்டுமே தான் முழக்கங்களை எழுப்பியதாக அவர் கூறினார். முதலமைச்சருக்கு எதிராகத் தனது போராட்டம் திருப்பப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளை அவர் முற்றிலுமாக மறுத்தார். சம்பவத்தன்று காவல்துறை தன்னை அப்புறப்படுத்திய நிலையில், தன் மீதான தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் செய்தியாளர்களிடம் இந்தக் தெளிவுபடுத்தலை வழங்கினார்.

மேலும், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதல்வர் விஜய்யை விமர்சித்த காரணத்தால் கைது செய்யப்பட்டார் என்று கடந்த ஜூலை 20ஆம் தேதி வெளியான  டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தின் செய்தி தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் மூலம் எம்எல்ஏ மார்கண்டேயனின் மகன் திருப்பரங்குன்றம் தீபத்தூன் தொடர்பான தீர்ப்பிற்கு எதிராகவே முழக்கம் எழுப்பி மதுரை விமான நிலையத்தில் கோஷமிட்டார் என்று தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் முதல்வர் விஜய்யை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டார் என்று வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில், இச்சம்பவம் பழையது என்றும் எம்எல்ஏ மகன் திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராகவே முழக்கம் எழுப்பினார் என்றும் தெரியவந்தது.

Fact Check: Jamui molestation case-Two accused killed in encounter? No, here are the facts

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയുടെ 76-ാം ജന്മദിനത്തില്‍ ബുര്‍ജ് ഖലീഫയില്‍ ആശംസ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: வாரணாசியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் எனப் பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ನಂದಿ ವಿಗ್ರಹಕ್ಕೆ ಬಾಳೆಹಣ್ಣು ತಿನ್ನಿಸುತ್ತಿರುವ ಕೋತಿ ಎಂದು ಎಐ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: జముయి వేధింపుల కేసు నిందితులను ఎన్‌కౌంటర్‌లో అరెస్ట్ చేశారా? కాదు, వీడియో ముజఫర్‌నగర్‌కు చెందినది