திமுக ஆட்சியில் சிவலிங்கம் அகற்றப்படுவதாக வைரலாகும் காணொலி 
Tamil

சாலையின் நடுவே உள்ள சிவலிங்கம் அகற்றம்: திமுக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வா?

திமுக ஆட்சியில் சாலையின் நடுவே உள்ள சிவலிங்கம் அகற்றப்படுவதாக சமூக வலைத்தளங்களில் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

சாலையின் நடுவே உள்ள சிவலிங்கத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்த வந்தபோது பொதுமக்கள் தடுப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரியினரால் பரப்பப்படுகிறது. மேலும், இந்நிகழ்வு திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறு பரப்பி வருகின்றனர்.

Fact-check:

இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வைரல் காணொலியில் உள்ள புகைப்படத்துடன் இந்தியா டுடே செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “தமிழ்நாட்டில் நடைபெற்ற இச்சம்பவத்தை கேரளாவில் நடைபெற்றது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்”

மேலும், அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்களை கூட்டிச் செல்ல பயன்படுத்திய வாகனத்தில் “VKT Highway Patrol (NH45C)” என்று அச்சிடப்பட்டிருந்தது. வி.கே.டி என்பது விக்கிரவாண்டி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் என்ற தமிழ்நாட்டில் உள்ள மூன்று பகுதிகளைக் குறிக்கும்.

2013-2016ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் VKT நெடுஞ்சாலையில் உள்ள கிராமங்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு சாலைத் திட்டத்தினை செயல்படுத்த முற்பட்டது. அப்போது, அவ்வழியில் இருந்த சில பழங்கால கோவில்களை அகற்றவும், வேறு இடத்திற்கு மாற்றவும் முயற்சித்ததால் தொடர் போராட்டங்கள் நடந்தது‌‌” என்று கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

"VKT Highway Patrol (NH45C)" என்று அச்சிடப்பட்டிருக்கும் வாகனம்

Conclusion: 

எனவே, திமுக ஆட்சியில் சிவலிங்கம் அகற்றப்படுவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வு என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது.

Fact Check: Jio recharge for a year at just Rs 399? No, viral website is a fraud

Fact Check: മുക്കം ഉമര്‍ ഫൈസിയെ ഓര്‍ഫനേജ് കമ്മിറ്റിയില്‍നിന്ന് പുറത്താക്കിയോ? സത്യമറിയാം

Fact Check: தந்தையும் மகனும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டனரா?

Fact Check: ಹಿಂದೂ ಮಹಿಳೆಯೊಂದಿಗೆ ಜಿಮ್​​ನಲ್ಲಿ ಮುಸ್ಲಿಂ ಜಿಮ್ ಟ್ರೈನರ್ ಅಸಭ್ಯ ವರ್ತನೆ?: ವೈರಲ್ ವೀಡಿಯೊದ ನಿಜಾಂಶ ಇಲ್ಲಿದೆ

ఫాక్ట్ చెక్: కేటీఆర్ ఫోటో మార్ఫింగ్ చేసినందుకు కాదు.. భువ‌న‌గిరి ఎంపీ కిర‌ణ్ కుమార్ రెడ్డిని పోలీసులు కొట్టింది.. అస‌లు నిజం ఇది