அமெரிக்காவில் இந்துக்களின் பொருட்களை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் 
Tamil

Fact Check: அமெரிக்க இந்துக்களிடம் பொருட்கள் வாங்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனரா?

அமெரிக்க இந்துக்களின் கடைகளில் இஸ்லாமியர்கள் பொருட்கள் வாங்க கூடாது என்று அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Southcheck Network

“அமெரிக்க முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள் காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அல்ல இந்து கடைகளில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது எனரோடுரோடாக பிரச்சாரம் செய்கின்றனர்.வியாபார லாபத்தில் குஜராத்தி ஹிந்துக்கள் இந்திய இந்துக்களுக்கு உதவ அனுப்புகின்றனர்” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் முகமது நபியை அவமதிக்கும் கருத்துக்கு எதிராக அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, Virendra Kumar Nishad என்ற எக்ஸ் பயனர் வைரலாகும் அதே காணொலியை 2022ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பதிவிட்டு, அதில் அமெரிக்காவின் சிக்காகோவில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2022ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி முஸ்லிம் மிரர் என்ற ஊடகம் வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்படி, “பாஜாகவின் நுபுர் ஷர்மா கூறிய நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Muslim Mirror வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

நம் தேடலின் முடிவாக அமெரிக்க இந்துக்களின் கடைகளில் இஸ்லாமியர்கள் பொருட்கள் வாங்க கூடாது என்று இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அது முகமது நபிகள் குறித்து தவறாக பதிவிடப்பட்ட கருத்திற்காக நடைபெற்ற போராட்டம் என்று தெரியவந்தது.

Fact Check: Humayun Kabir’s statement on Babri Masjid leads to protest, police action? Here are the facts

Fact Check: താഴെ വീഴുന്ന ആനയും നിര്‍ത്താതെ പോകുന്ന ലോറിയും - വീഡിയോ സത്യമോ?

Fact Check: சென்னையில் அரசு சார்பில் ஹஜ் இல்லம் ஏற்கனவே உள்ளதா? உண்மை அறிக

Fact Check: ಜಪಾನ್‌ನಲ್ಲಿ ಭೀಕರ ಭೂಕಂಪ ಎಂದು ವೈರಲ್ ಆಗುತ್ತಿರುವ ವೀಡಿಯೊದ ಹಿಂದಿನ ಸತ್ಯವೇನು?

Fact Check: శ్రీలంక వరదల్లో ఏనుగు కుక్కని కాపాడుతున్న నిజమైన దృశ్యాలా? కాదు, ఇది AI-జనరేటెడ్ వీడియో