உபியில் நடைபெற்ற "I Love Mahadev" தீப பேரணி 
Tamil

Fact Check: யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினரா பொதுமக்கள்? உண்மை என்ன

உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து தீப்பந்தத்துடன் பேரணி நடத்திய அம்மாநில பொதுமக்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் மீலாது நபி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட, “I Love Mohammed” என்ற பெயர் பலகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து அமைப்பினர் “I Love Mahadev” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், “I Love Mahadev” என்று உத்திரப் பிரதேசத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து பொதுமக்கள் தீப்பந்தத்துடன் பேரணி நடத்தியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் ராஜஸ்தானில் அரசு பள்ளி இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நியாயம் கேட்டு நடத்தப்பட்ட பேரணி என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Naresh Meena என்ற பேஸ்புக் பயனர் வைரலாகும் அதே காணொலியின் நேரலைப் பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில், “ஜலவார்-பிப்லோடி விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அனிருத் தலைமையில் ஒரு மாபெரும் ஜோதி ஊர்வலம்" ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

The Hindu வெளியிட்டுள்ள செய்தி

கிடைத்த தகவல்கள்ளைக் கொண்டு கூகுளில் கீவேர்ட் சர்ச் செய்து பார்த்தோம். கடந்த ஜூலை 25ஆம் தேதி The Hindu ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏழு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக உத்தரப்பிரதேச காவல்துறையும் தனது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் காணொலி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜோதி ஊர்வலம் என்றும் இதற்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, ராஜஸ்தானின் ஜாலவாரில் அரசு பள்ளி இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குழுந்தைகளுக்கு நியாயம் கேட்டு நடைபெற்ற மக்கள் பேரணியை உத்தரப்பிரதேசத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது

Fact Check: Bihar polls – Kharge warns people against Rahul, Tejashwi Yadav? No, video is edited

Fact Check: കേരളത്തിലെ അതിദരിദ്ര കുടുംബം - ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: அமெரிக்க இந்துக்களிடம் பொருட்கள் வாங்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனரா?

Fact Check: ಹಿಜಾಬ್ ಕಾನೂನು ರದ್ದುಗೊಳಿಸಿದ್ದಕ್ಕೆ ಇರಾನಿನ ಮಹಿಳೆಯರು ಹಿಜಾಬ್‌ಗಳನ್ನು ಸುಟ್ಟು ಸಂಭ್ರಮಿಸಿದ್ದಾರೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: వాట్సాప్, ఫోన్ కాల్ కొత్త నియమాలు త్వరలోనే అమల్లోకి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి