“பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்… இந்த வீடியோ தானே தேடிகிட்டு இருந்தீங்க நீங்க… பாவம் சிங் சார்..” என்ற கேப்ஷனுடன் சீன அதிபரிடம் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலைப்படுத்தப்படாமல் சோனியா காந்தி முன்னிலைப்படுத்தப்படுவதாக கூறி காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் 2015ஆம் ஆண்டு சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவரை மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்த போது எடுக்கப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2015ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி Zee News ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்கிழமை (ஜூன் 16) சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாங் டெஜியாங் தலைமையிலான நாடாளுமன்ற குழு மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதே தேதியில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இச்சந்திப்பு தொடர்பான புகைப்படத்துடன் அதே தகவல் பதிவிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கவில்லை. நரேந்திர மோடி தான் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக முன்னாள் சீன அதிபரும் மன்மோகன் சிங்கும் சந்தித்துக் கொண்ட போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலைப்படுத்தப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாங் டெஜியாங் சந்தித்தபோது எடுக்கப்பட்ட காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர் என்றும் தெரியவந்தது.