fifthestatedigital1
Tamil

Fact Check: நக்கீரன் கோபால் மீது பதியப்பட்ட வழக்கிற்கு கண்டனம் தெரிவித்ததா தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்? உண்மை அறிக

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நக்கீரன் கோபால் மீது பதியப்பட்ட வழக்கை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வரவேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

Southcheck Network

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அவதூறாகப் பேசியதாகப் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கையைத் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வரவேற்றுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் அறிக்கை போலியானது என்று தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வரவேற்றதாக சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை முற்றிலும் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உண்மையில், நக்கீரன் கோபால் மீது பதியப்பட்ட வழக்கைக் கண்டித்து மட்டுமே தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த உண்மையான அறிக்கையை எடிட் செய்தே, வழக்கை வரவேற்பது போன்ற போலி அறிக்கை உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான இந்திர குமார் தேரடி அவர்கள், சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த அறிக்கை போலியானது என்று அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Conclusion:

சமூக வலைதளங்களில் பகிரப்படும் 'தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்' பெயரிலான அறிக்கை போலி என்று உறுதி செய்யப்படுகிறது. நக்கீரன் கோபால் கைதை கண்டித்தே அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Fact Check: Jamui molestation case-Two accused killed in encounter? No, here are the facts

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയുടെ 76-ാം ജന്മദിനത്തില്‍ ബുര്‍ജ് ഖലീഫയില്‍ ആശംസ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: வாரணாசியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் எனப் பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ನಂದಿ ವಿಗ್ರಹಕ್ಕೆ ಬಾಳೆಹಣ್ಣು ತಿನ್ನಿಸುತ್ತಿರುವ ಕೋತಿ ಎಂದು ಎಐ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: జముయి వేధింపుల కేసు నిందితులను ఎన్‌కౌంటర్‌లో అరెస్ట్ చేశారా? కాదు, వీడియో ముజఫర్‌నగర్‌కు చెందినది