நாட்டிலேயே அதிகப்படியான வக்ஃபு சொத்துக்களைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது 
Tamil

Fact Check: நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக வக்ஃபு சொத்துக்கள் உள்ளனவா? உண்மை அறிக

நாட்டிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் வக்ஃபு சொத்துக்கள் உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Ahamed Ali

ஒன்றிய அரசு சமீபத்தில் வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதன்மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். எனினும் இம்மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும் இஸ்லாமியர்களும் கடுமையாக எதிரப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகபட்சமாக வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் அதிகமான வக்ஃபு சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது.

வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை அறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, PIB கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாத தரவுகளின் படி உத்தரப் பிரதேச மாநிலத்தின் சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திடம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 161  வக்ஃபு  சொத்துக்கள் இருக்கிறது. இதுதான் நாட்டிலேயே அதிக சொத்து எண்ணிக்கை உள்ள வக்ஃப் வாரியமாகும். இப்படியலின் படி 66 ஆயிரத்து 92 சொத்துக்களுடன் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் நான்காவது இடத்தில் தான் இருக்கிறது என்று தெரியவருகிறது.

PIB வெளியிட்டுள்ள செய்தி

இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி CNBC TV 18 வெளியிட்டுள்ள செய்தியின் படி, “உத்தரபிரதேசத்தில் வக்ஃப் சொத்துக்களின் மிகப்பெரிய பங்கு உள்ளது, இது தேசிய மொத்தத்தில் 27% ஆகும். குறிப்பிடத்தக்க வக்ஃப் சொத்துக்கள் உள்ள பிற மாநிலங்களில் மேற்கு வங்கம் 80 ஆயிரத்து 480 சொத்துக்களையும், பஞ்சாப் 75 ஆயிரத்து 965 சொத்துக்களையும், கர்நாடகாவில் 62 ஆயிரத்து 830 சொத்துக்களையும் கொண்டுள்ளது.

CNBC வெளியிட்டுள்ள செய்தி

இதற்கு நேர்மாறாக, குஜராத், தெலுங்கானா மற்றும் கேரளாவில் முறையே 39 ஆயிரத்து 940, 45 ஆயிரத்து 682 மற்றும் 53 ஆயிரத்து 282 சொத்துக்களுடன் ஒப்பீட்டளவில் குறைவான வக்ஃப் சொத்துக்கள் உள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி Money Control வெளியிட்டுள்ள செய்தியின் படியும் உத்தர பிரதேச மாநிலத்தில் தான் அதிகமான வக்ஃபு சொத்துக்கள் இருப்பது உறுதியாகிறது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் தமிழ்நாட்டில் அதிகப்படியான வக்பு சொத்துக்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் அதிகமான வக்ஃபு சொத்துக்கள் உள்ளன என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Massive protest in Iran under lights from phones? No, video is AI-generated

Fact Check: ഇറാനില്‍ ഇസ്ലാമിക ഭരണത്തിനെതിരെ ജനങ്ങള്‍ തെരുവില്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: கேரளப் பேருந்து காணொலி சம்பவத்தில் தொடர்புடைய ஷிம்ஜிதா கைது செய்யப்பட்டதாக வைரலாகும் காணொலி? உண்மை அறிக

Fact Check: ICE protest in US leads to arson, building set on fire? No, here are the facts

Fact Check: ಬಾಂಗ್ಲಾದೇಶದಲ್ಲಿ ಗಾಂಧೀಜಿ ಪ್ರತಿಮೆಯ ಶಿರಚ್ಛೇದ ಮಾಡಿರುವುದು ನಿಜವೇ?, ಇಲ್ಲಿದೆ ಸತ್ಯ