ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி 
Tamil

Fact Check: 2025-ல் ஜப்பானைத் தாக்கிய சுனாமி என்று வைரலாகும் காணொலி? உண்மையை அறிக

சமீபத்தில் 2025ஆம் ஆண்டில் ஜப்பானில் சுனாமி தாக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்று வைரலாகும் காணொலி

Ahamed Ali

“2025ல் ஜப்பானை சுனாமி தாக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த மார்ச் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில் இக்காணொலி பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2011ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி Haber Turk என்ற துருக்கி மொழி இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “ஜப்பானில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ANNnewsCH என்ற ஊடகத்தில் வைரலாகும் அதே காணொலியின் மற்றொரு கோணக் காட்சி “Tsunami, Great East Japan Earthquake - Miyako city, Iwate Pref, Japan [11 Mar 2011]” என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2011 Japan Tsunami Archives என்ற யூடியூப் சேனலில் Miyako City Hall-லில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் முழு நீளக்காணொலி என்று வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் 2025ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Vijay’s rally sees massive turnout in cars? No, image shows Maruti Suzuki’s lot in Gujarat

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയെ ഡ്രോണ്‍ഷോയിലൂടെ വരവേറ്റ് ചൈന? ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: மன்மோகன் சிங் - சீன முன்னாள் அதிபர் சந்திப்பின் போது சோனியா காந்தி முன்னிலைப்படுத்தப்பட்டாரா? உண்மை அறிக

Fact Check: ಪ್ರವಾಹ ಪೀಡಿತ ಪಾಕಿಸ್ತಾನದ ರೈಲ್ವೆ ಪರಿಸ್ಥಿತಿ ಎಂದು ಎಐ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో