மேற்கு வங்கத்தில் கடையை உடைத்த இரு இஸ்லாமியர்கள் 
Tamil

Fact Check: இஸ்லாமியர்கள் இருவரை கைது செய்த இந்திய ராணுவம்? மேற்கு வங்கத்தில் நடைபெற்றதா

மேற்கு வங்கத்தில் கடையை உடைத்துக் கொண்டிருந்த இரண்டு இஸ்லாமியர்களை இந்திய ராணுவம் கைது செய்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

மேற்குவங்க முதல்வர் மும்தா பானர்ஜியின் பெயரைக் குறிப்பிட்டு இஸ்லாமியர்கள் இருவர் கடையினை அடித்து உடைப்பதாக காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இந்நிகழ்வு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது என்பது போன்று கூறி பரப்பி வருகின்றனர். மேலும் அதில் கடையை உடைத்த இருவரையும் ராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவம் அவர்கள் இருவரையும் கைது செய்வதாக கூறப்படுகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check

சவுத் செக்கின் ஆய்வில் இந்நிகழ்வு வங்கதேசத்தில் நடைபெற்றது என்று தெரிய வந்தது. 

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, Independent Television என்ற வங்கதேச ஊடகம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருந்தது. மேலும், அதில் “ஃபரித்பூரில் கடையை உடைத்துக்கொண்டிருந்த இருவரை பிடித்த ராணுவத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிகழ்வு வங்கதேசத்தில் நடைபெற்றது என்பதை அறிய முடிகிறது.

தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு இது தொடர்பாக தேடியபோது, Dhaka Tribune ஊடகம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்படி, இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வங்கதேசத்தின் ஃபரித்பூர் மாவட்டத்தில் நடந்தது. ஃபரித்பூரில் உள்ள வங்காளதேச தேசியவாதக் கட்சியின் போவால்மாரி உபாசிலா தலைவரும், ஜாதியதாபாடி ஸ்வச்சசேபக் தளத்தின் உபாசிலா கிளையின் ஒருங்கிணைப்பாளருமான சஞ்சய் சஹாவுக்குச் சொந்தமான ஒரு கடையை தாக்கி நாசப்படுத்தியது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Dhaka Tribune வெளியிட்டுள்ள செய்தி

கைது செய்யப்பட்ட முகமது துட்டுல் ஹொசைன் மற்றும் துக்கு மியா ஆகியோர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, போவால்மாரி உபாசிலா முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஜூபோ டாலின், வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் முஹம்மது அஜிசுல் ஷேக் மற்றும் அடையாளம் தெரியாத 8 முதல் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு போவால்மாரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பைக்கில் வந்த இருவர் ஆயுதங்களுடன் சஞ்சய் சஹாவின் கடையை தாக்குவது சிசிடிவி காட்சியித் பதிவாகியுள்ளது. அச்சமயம், அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு ராணுவ ரோந்து வாகனங்களில் இருந்து வந்த ராணுவ வீரர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போல்மாரி காவல் ஆய்வாளர் முஹம்மது ஷஹீதுல் இஸ்லாம் உறுதிப்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Dhaka Post, Dainik Amader Shomoy உள்பட பல்வேறு வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் மேற்கு வங்கத்தில் கடையை சேதப்படுத்திய இரண்டு இஸ்லாமியர்களை இந்திய ராணுவம் கைது செய்ததாக வைரலாகும் நிகழ்வு உண்மையில் வங்கதேசத்தில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: ‘Vote chori’ protest – old, unrelated videos go viral

Fact Check: അഫിലിയണ്‍ പ്രതിഭാസത്തിന്റെ ഭാഗമായി ഈ മാസം അസുഖങ്ങള്‍ക്ക് സാധ്യതയോ? സന്ദേശത്തിന്റെ വാസ്തവം

Fact Check: நடிகர் ரஜினி தவெக மதுரை மாநாடு குறித்து கருத்து தெரிவித்ததாக பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ರಾಹುಲ್ ಗಾಂಧಿಗಾಗಿ ಬಿಹಾರದಲ್ಲಿ ಜನಸಮೂಹ?, ವೈರಲ್ ವೀಡಿಯೊದ ಸತ್ಯ ತಿಳಿಯಿರಿ

Fact Check: కేసీఆర్ హయాంలో నిర్మించిన వంతెన కూలిపోవడానికి సిద్ధం? లేదు, ఇది బీహార్‌లో ఉంది