fifthestatedigital1
Tamil

Fact Check: முதல்வர் விஜய்யின் பெற்றோரின் திருமணத்தின் போது அவர் அருகில் இருந்ததாக பரவும் புகைப்படம் உண்மையானதா அல்லது போலியானதா?

தமிழக முதல்வர் விஜய் தனது பெற்றோரின் திருமணத்தின்போது அருகில் இருந்ததா கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

Southcheck Network

தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது பெற்றோரின் திருமணத்தின் போது இருப்பதாக கூறி வைரலாகும் புகைப்படத்தில் விஜய்யின் பெற்றோரான ஷோபனா மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோரின் அருகில் விஜய் சிறுவனாக நிற்கக்கூடிய காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவரது பெற்றோர் திருமணம் முடிப்பதற்கு முன்பாகவே விஜய்யை பெற்றெடுத்துக்கொண்டதாக தவறான கண்ணோட்டத்தில் இப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்‌

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் தவறான கண்ணோட்டத்தில் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது.

இத்தகவலின் உண்மையை கண்டறிய விஜய்யின் பெற்றோரின் திருமணம் குறித்து தேடினோம். அப்போது, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது அதிகாரப்பூர்வமான ‘யார் இந்த எஸ்ஏசி’ யூடியூப் பக்கத்தில், ஷோபாவுக்கும் தனக்குமான காதல் மற்றும் திருமணம் குறித்துப் பேசியுள்ளார்.

அதில், ஷோபாவுக்கு 15 வயது இருக்கும்போதிலிருந்தே அவரை காதலித்ததாகவும், ஆறு வருட காதலுக்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு கிறித்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக மற்றொரு காணொலியில் அவர் தெரிவித்தார். இத்திருமணத்தில் விஜய் கலந்துகொண்டதாகவும், அந்தச் சமயத்தில் விஜய்யின் தாயார் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்

இந்தக் காணொலியில், பெற்றோரின் திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படமும் 3:38 பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Conclusion:

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வைரலாகும் தகவல் தவறானது என்று நம்மால் கூற முடிகிறது.

Fact Check: Jamui molestation case-Two accused killed in encounter? No, here are the facts

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയുടെ 76-ാം ജന്മദിനത്തില്‍ ബുര്‍ജ് ഖലീഫയില്‍ ആശംസ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: வாரணாசியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் எனப் பரவும் காணொலி? உண்மை என்ன

Fact Check: ನಂದಿ ವಿಗ್ರಹಕ್ಕೆ ಬಾಳೆಹಣ್ಣು ತಿನ್ನಿಸುತ್ತಿರುವ ಕೋತಿ ಎಂದು ಎಐ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: జముయి వేధింపుల కేసు నిందితులను ఎన్‌కౌంటర్‌లో అరెస్ట్ చేశారా? కాదు, వీడియో ముజఫర్‌నగర్‌కు చెందినది