நெருப்பை அணைக்கும் கோதுமை மாவு என வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: கோதுமை மாவு நெருப்பை கட்டுப்படுத்தும் என வைரலாகும் தகவல் உண்மை தானா?

கோதுமை மாவு கேஸ் சிலிண்டரில் ஏற்படும் நெருப்பை கட்டுப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்

Ahamed Ali

நெருப்பு பற்றினால் அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தீயணைப்பானைக் கொண்டு நெருப்பை அணைக்கலாம். அல்லது, நெருப்பின் வகையைப் பொறுத்து தண்ணீர் அல்லது மணலைக் கொண்டு நெருப்பை அணைக்கலாம். இவை பொதுவாக பின்பற்றப்படும் தீயணைப்பு வழிமுறைகள்.

ஆனால், சிறிதளவு கோதுமை மாவு கேஸ் சிலிண்டர் விபத்தைத் தடுக்கும் என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தீயணைப்பு வீரர் ஒருவர் கேஸ் சிலிண்டரில் எரியும் நெருப்பை பொடி போன்ற ஒரு பொருளைக் கொண்டு அணைக்கிறார். பொடி போன்ற பொருள் கோதுமை மாவு என்றும் அது நெருப்பை அணைக்கும்  என்றும் கூறி இதனை பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் கோதுமை மாவு நெருப்பை அணைக்காது என்றும் தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Qi Zhang மற்றும் Qi Yan ஆகியோர் கிடைமட்ட குழாய்களில் மாவு  / காற்று கலவையின் வெடிப்பு செயல்முறை குறித்த பரிசோதனை ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதன் ஆய்வு முடிவுகள் ScienceDirect என்ற இணையதளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவு ஒரு எரியக்கூடிய பொருள் என்று குறிப்பிட்டுள்ளது.

Science Directல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள்

மேலும், மலேசியாவைச் சேர்ந்த Mohd Aizad Ahmad மற்றும் Muhammad Azam ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், கோதுமை மாவு ஆலைகளில் "கிடைமட்ட பரப்புகளில் எரியக்கூடிய தூசிகள் குவிவதால், இந்த தூசி தீப்பிடித்து எரிக்கப்படுவதால்" தீ விபத்து ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தேடுகையில் sciencefix என்ற யூடியூப் சேனலில் எரியக்கூடிய மாவு என்று காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், எரியக்கூடிய மெழுகுவர்த்தியின் மேல் மாவு எரியப்படவே அது தீப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக சிறிதளவு கோதுமை மாவு கேஸ் சிலிண்டரில் ஏற்படும் நெருப்பை கட்டுப்படுத்தும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் மாவு நெருப்பை அதிகப்படுத்தவே செய்யும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Manipur’s Churachandpur protests see widespread arson? No, video is old

Fact Check: നേപ്പാള്‍ പ്രക്ഷോഭത്തിനിടെ പ്രധാനമന്ത്രിയ്ക്ക് ക്രൂരമര്‍‍ദനം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அரசியல், பதவி மோகம் பற்றி வெளிப்படையாக பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை அறிக

Fact Check: ಮೈಸೂರಿನ ಮಾಲ್​ನಲ್ಲಿ ಎಸ್ಕಲೇಟರ್ ಕುಸಿದ ಅನೇಕ ಮಂದಿ ಸಾವು? ಇಲ್ಲ, ಇದು ಎಐ ವೀಡಿಯೊ

Fact Check: నేపాల్‌లో తాత్కాలిక ప్రధానిగా బాలేంద్ర షా? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి