“நீட் வழக்கு: ஜார்கண்ட் டியோகர் காங்கிரஸ் அலுவலகத்தில் பதுங்கியிருந்த 6 பேரை சிபிஐ கைது செய்தது” என்ற கேப்ஷனுடன் சிலரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இவர்கள் 6 பேரும் ஜார்க்கண்டின் தியோகர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, All India Radio கடந்த ஜூன் 23ஆம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “2024 நீட் (UG) தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளது.
தியோகர் சதர் SDPO ரித்விக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், தேவிபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள எய்ம்ஸ்-தியோகர் அருகே வாடகை வீட்டில் இருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று இவர்கள் ஆறு பெரும் தியோகர் பகுதியில் இருந்த வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்று The Hindu, NDTV உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், வைரலாகும் காணொலி குறித்து தேடுகையில், “NEET(UG) வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பாட்னாவில் உள்ள LNJP மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். ஜூன் 21ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் குற்றவாளிகளை பீகார் காவல்துறையினர் கைது செய்தனர்” என்று நேற்று(ஜுன் 24) வைரலாகும் காணொலியுடன் The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, வைரலாகும் காணொலியில் இருப்பவர்கள் பாட்னா LNJP மருத்துவமனையிலிருந்து மருத்துவ பரிசோதனை முடிந்து கொண்டு வரப்படுகின்றனர் என்றும் அவர்கள் ஆறு பேரும் தியோகரில் கைது செய்யப்பட்டார்கள் என்பது உண்மை என்றாலும், காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து கைது செய்யப்படவில்லை மாறாக வாடகை வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.