

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகவும். கோயிலுக்குள் அசைவ உணவை சாப்பிட்டு கோயிலின் புனிதத்தை கிறிஸ்தவர்கள் எடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையது என்பது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, BKP-Prime என்ற ரெட்டிட் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பதிவிடப்பட்டிருந்தது.
வைரலாகும் இதே காணொலியை தனது எக்ஸ் தளத்தில் 2023ஆம் ஆண்டு பதிவிட்டிருந்த பாஜக உறுப்பினர் மற்றும் வழக்கறிஞரான அசோக் என்பவர் “அப்படித்தான் சிக்கன் பிரியாணி சாப்பிடுவோம் புதுக்கோட்டை தாஸ் சொல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நம் தேடலில் இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரிந்தது. எனவே இச்சம்பவத்தின் பின்னணி குறித்து சுயாதீனமாக விசாரிக்க முடியவில்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுக்குள் கிறிஸ்தவர் ஒருவர் சென்று அசைவ உணவு சாப்பிட்டதாக வைரலாகும் காணொலி 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.