Fact Check: பெண் வேட்பாளரின் புகைப்படம் இல்லாத தேர்தல் பதாகை கேரளாவில் வைக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன

பெண்களின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரப்பதாகையில் கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு மத வெறி கொண்ட சமூகமாக கேரளாவில் உள்ளனர் என்று வைரலாகும் புகைப்படம்
கேரளாவில் தேர்தல் பிரச்சார பதாகையில் பெண்கள் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை
கேரளாவில் தேர்தல் பிரச்சார பதாகையில் பெண்கள் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை
Published on
1 min read

கேரளாவில் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் படத்திற்கு பதிலாக கணவரின் படம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. “சுலைமானின் மனைவி பாத்திமாவை வெற்றியாளராக ஆக்குங்கள்” என்ற வாசகத்துடன் நிறுவப்பட்ட விளம்பரப் பலகையில், வேட்பாளரின் படத்திற்கு பதிலாக வேறொருவரின் படம் காட்டப்பட்டுள்ளது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

இந்த விளம்பரப் பலகையில் சக்கரக்கூடம் கிராம பஞ்சாயத்து 11வது வார்டின் பெயரும், PPDP கட்சியின் சின்னமும் உள்ளது. எழுத்தறிவு பெற்ற கேரளாவில், பெண்களின் படங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்குக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு மத வெறி கொண்ட சமூகங்கள் உள்ளன என்ற விமர்சனத்துடன் விளம்பரப் பலகை பரப்பப்படுகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என்று தெரியவந்தது.

பரவி வரும் படத்தில் உள்ள பஞ்சாயத்தின் பெயர் ஆரம்பத்தில் சந்தேகங்களை எழுப்பியது. இதன் மூலம், கேரளாவில் சக்கரக்கூடம் என்ற பஞ்சாயத்து இருக்கிறதா என்று சோதித்தோம். இதற்காக, நேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடியபோது அவ்வாறாக எந்த ஒரு பஞ்சாயத்தும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும், தேடுகையில் புகைப்படத்தில் வரும் PPDP என்ற கட்சி கேரளாவில் இல்லை என்பதும் தெரியவந்தது. இதன் மூலம் படம் உண்மையானது அல்ல என்பது தெளிவாகியது.

கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அந்தப் படம் மலையாளத் திரைப்படமான 'வெள்ளரிப்பட்டணம்'-லிருந்து வந்திருக்கலாம் என்பதைக் காட்டியது. தொடர்ந்து, யூடியூப்பில் தேடும்போது திரைப்படத்தின் முழு பதிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், 1:19:30 பகுதியில் வைரலாகும் புகைப்படத்தின் பகுதி இருப்பது தெரியவந்தது.

இந்தப் படத்தை மகேஷ் வெட்டியார் இயக்க, கே.ஆர். மணி தயாரித்து 2023ல் வெளியிட்டார். பாத்திமா கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்தார். சௌபின் ஷாஹிர் மற்றும் சலீம் குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

Conclusion:

நம் தேடலில் முடிவாக வைரலாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதும், அது ஒரு மலையாள திரைப்படத்தின் ஒரு பகுதி என்பதும் தெளிவாகியது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in