

நேபாளத்தில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மசூதியின் மினாரெட் மீது கும்பல் ஒன்று ஏறி சேதப்படுத்துவதும், அங்குள்ள மதச் சின்னங்களை அகற்றுவதும் போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலி நேபாளத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்று பலராலும் நம்பப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி டில்லியில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இந்த காணொலியை ஆய்வு செய்ததில், இது நேபாளத்தில் நடந்த சமீபத்திய சம்பவம் அல்ல என்பது உறுதியாகியுள்ளது. இந்த காணொலி மார்ச் 1, 2020 அன்று வெளியான ஒரு பழைய காட்சியாகும். இது பிப்ரவரி 2020 இல் இந்தியாவின் தலைநகரான டெல்லியின் அசோக் நகரில் ஏற்பட்ட மதக்கலவரத்தின் போது எடுக்கப்பட்ட காணொலியாகும்.
தி டெலிகிராப் (The Telegraph) தனது யூடியூப் சேனலில், "New Delhi mob torches and vandalises mosque as sectarian violence in India intensifies" என்ற தலைப்பில் மார்ச் 1, 2020 அன்று இந்த காணொலிவை வெளியிட்டிருந்தது.
மேலும், பிப்ரவரி 27, 2020 அன்று ‘தி பிரிண்ட்’ (ThePrint) செய்தி இணையதளத்தில் வெளியான கட்டுரையின்படி, அசோக் நகரில் உள்ள அந்த மசூதி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்தக் கட்டுரையில், கலவரத்தின் போது மசூதி சேதப்படுத்தப்பட்டதையும், அது அப்பகுதியின் அமைதியைப் பாதித்ததையும் அப்பகுதி மக்கள் விவரித்துள்ளனர்.
Conclusion:
எனவே, நேபாளத்தில் மசூதி உடைக்கப்படுவதாகக் கூறி பரப்பப்படும் காணொலி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு பழைய வன்முறைச் சம்பவத்தை, தற்போது நேபாளத்தில் நடப்பதாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.