Fact Check: ‘Jailer 2’ திரைப்படத்திற்காக ரஜினிகாந்தை சிவகார்த்திகேயன் வாழ்த்தியதாகப் பகிரப்படும் காணொலி? உண்மை என்ன

‘Jailer 2’ படத்தின் நாயகன் ரஜினிகாந்தை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்ததாகச் சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொலி
Fact Check: ‘Jailer 2’ திரைப்படத்திற்காக ரஜினிகாந்தை சிவகார்த்திகேயன் வாழ்த்தியதாகப் பகிரப்படும் காணொலி? உண்மை என்ன
fifthestatedigital1
Published on: 
1 min read

"Jailer 2 படத்தின் வெற்றிக்காக அந்த படத்தின் கதாநாயகனை அழைத்து வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்" என்ற குறிப்புடன் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சிவகார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து பெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் எடிட் செய்யப்பட்டிருப்பது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, சமீபத்தில் வெளியான 'Modharathri' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வு தொடர்பான செய்திகளும் காட்சிகளும் முன்னதாக முன்னணி ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அந்த அசல் காணொலியில் இடம்பெற்ற நபரின் உருவத்திற்குப் பதிலாக, ரஜினிகாந்தின் முகத்தை மார்பிங் மற்றும் எடிட்டிங் முறையில் இணைத்து தவறான நோக்கில் உலவவிட்டுள்ளனர்.

Conclusion:

நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்றதாகப் பரவும் காணொலி முற்றிலும் போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என்பதை சவுத்செக் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது.

logo
South Check
southcheck.in