
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நேற்றைய (அக்டோபர் 6) தேதியிட்ட நியூஸ் கார்ட் சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. அதில், “பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்த விஜய்!” என்ற தலைப்பில், “கரூரில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி மற்றும் நிவாரணம் வழங்க அவர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்துள்ளதாக தகவல். வார இறுதிக்குள் அவர்களை பனையூருக்கு அழைத்துவர நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, தவெக தலைவர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்ததாக எந்த ஒரு செய்தியையும் எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை என்று தெரியவந்தது.
தொடர்ந்து, இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக வலைதளங்களில் ஆய்வு செய்ததில், அவ்வாறான எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. மாறாக, வைரலாகும் அந்த நியூஸ் கார்ட் போலியானது என்ற விளக்கத்தை இன்று(அக்டோபர் 7) வெளியிட்டுள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பனையூருக்கு அழைத்ததாக வைரலாகும் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலியானது என்று தெரியவந்தது.