
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரின் மூலம் இது தவறான தகவல் என்னு தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெரியவந்தது.
இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது மாலைமலர் ஊடகம் இது தொடர்பாக கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் வாழ்க்கைய மற்றவர்கள் முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்படியே HONEYMOON செல்வதை பற்றியும் சொன்னால் நல்லது" என்று பதிவிட்டுள்ளார். அதே போல் அவரது தாயாரும், இது அடிக்கடி வரும் தகவல்கள் தான். இதில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை திரிஷா வைரலாகும் தகவல் தவறானது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக வரும் தகவல் தவறானது என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் என்றும் தெரியவந்தது.