Fact Check: இந்துக் கடவுளுக்கு தீபாராதனை காட்டினாரா அசாதுதீன் ஓவைசி? உண்மை அறிக

ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி இந்து கடவுளுக்கு தீபாராதனை காட்டியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
Fact Check: இந்துக் கடவுளுக்கு தீபாராதனை காட்டினாரா அசாதுதீன் ஓவைசி? உண்மை அறிக
Published on
2 min read

AIMIM கட்சியின் தலைவரும் ஹைதராபாத்தின் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி இந்துக் கடவுளான ஹனுமானுக்கு தீபாராதனை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் (Archive) காணொலி பரவி வருகிறது. இவர் இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய ஓவைசி இந்து கோயில்களுக்கு சென்றாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை என்று தெரியவந்தது.

எனவே, வைரலாகும் காணொலியை ஆராய்ந்தபோது அதில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலிக்கான பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. ஆரத்தி கோணங்கள் மாறாத நிலையில் இருந்தது.

தொடர்ந்து, வைரலாகும் காணொலியில் கூகுளின் Gemini AIயின் லோகோ இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது. இதன் மூலம் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

எனவே, வைரலாகும் காணொலியை Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், இக்காணொலி 99.9% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தது. மேலும், Deep-Fake-O-Meter இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் வைரலாகும் காணொலி 92 முதல் 99.8% வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று நான்கு டிடெக்டர்கள் முடிவுகளை தந்தன.

Conclusion:

முடிவாக நம் தேடலில் இந்துக் கடவுளுக்கு தீபாராதனை காட்டும் அசாதுதீன் ஓவைசி என்று வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in