Fact Check: வங்கதேச ராணுவத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் இந்துக்களை தாக்குகின்றனரா?

வங்கதேச இந்துக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் சேர்ந்து தாக்குவதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
வங்கதேச ராணுவத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் சேர்ந்து இந்துக்களை தாக்குகின்றனர்
வங்கதேச ராணுவத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் சேர்ந்து இந்துக்களை தாக்குகின்றனர்
Published on
1 min read

வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “பங்ளாதேஷ் நிலவரம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. புதியதாக பதவியேற்றிருக்கும் பங்ளாதேஷ் பிரதமர் நமது பிரதமரிடம் சிறுபான்மையினருக்கும் இந்துக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார் மகிழ்ச்சி துரித நடவடிக்கை தேவை” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அக்காணொலியில் வங்கதேச ராணுவமும் இஸ்லாமியர்களும் சேர்ந்து இந்துக்களை தாக்குவதாக கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் கடையில் கொள்ளையடித்தவர்களை வங்கதேச ராணுவத்தினர் தாக்குகின்றனர் என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.

அப்போது, கடந்த ஆக. 10ஆம் தேதி EidgahNews.com என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “சிட்டகாங்கில் ஒரு வீட்டை கொள்ளையடிக்கும் போது இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே தகவலை News Now Bangla உள்ளிட்ட பல்வேறு பேஸ்புக் பக்கங்களும் பதிவிட்டுள்ளன.

மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, BDMilitary/BDOSINT(Defence and Intelligence Observation) என்ற ராணுவம் குறித்து செய்தி வெளியிடும் பேஸ்புக் பக்கம், “வங்கதேச ராணுவம் கொள்ளையர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக வங்கதேச ராணுவத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் சேர்ந்து இந்துக்களை தாக்குவதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் சிட்டகாங்கில் கொள்ளையடித்தவர்களை ராணுவத்தினர் தாக்கும் காட்சி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in