Fact Check: கொலை செய்யப்பட்ட இந்து குடும்பம்: வங்கதேசத்தில் நடைபெற்ற சம்பவமா?

வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து குடும்பம் என்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வங்கதேசத்தில் இந்து குடும்பம் கொலை செய்யப்பட்டதாக வைரலாகும் காணொலி
வங்கதேசத்தில் இந்து குடும்பம் கொலை செய்யப்பட்டதாக வைரலாகும் காணொலி
Published on
2 min read

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினார். இந்நிலையில், “How bangladeshi killing hindu family தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டே இருங்கடா நாளை ஒருநாள் இது நமக்கும் நடக்கும்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஆண் பெண் மற்றும் குழந்தைகள் இருவர் என நான்கு பேர் தூக்கில் சடலமாக தொங்குவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருக்கும் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வங்காள மொழியில் பயனர்பெயர் வைத்திருந்த பேஸ்புக் பயனர் ஒருவர் கடந்த ஜுலை 28ஆம் தேதி வைரலாகும் காணொலியை பதிவிட்டிருந்தார். அதில், “பிரம்மன்பாரியாவின் நபிநகர் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்” என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் வங்காள மொழியில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்ததில், கடந்த ஜூலை 28ஆம் தேதி வங்கதேச ஊடகமான The Daily Star வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) காலை 10:30 மணியளவில் நபிநகர் நகராட்சிப் பகுதியின் விஜய்பாராவில் உள்ள வீட்டில் இருந்து நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை நபிநகர் வட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிராஜுல் இஸ்லாம் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “விஜயபாரா பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரியான சோஹாக் மியா (33), அவரது மனைவி ஜன்னத் அக்தர் (25), அவர்களது இரு மகள்கள் ஃபரியா அக்தர் (4), ஃபஹிமா அக்தர் (2) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் வீட்டின் அருகில் இருந்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினர் நேரில் சென்று சடலங்களை மீட்டனர். அவர்களின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்தும், அவர்களின் மரணத்திற்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” என்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Kalerkantho, Ajkerpatrika உள்ளிட்ட வங்கதேச ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக வங்கதேசத்தில் இந்து குடும்பம் கொலை செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது உண்மையில் அதில் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in