

பாஜக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பீகாரில் வெடித்த போராட்டத்தைக் காட்டுவதாகக் கூறி ஒரு காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. ஜூபீன் கார்க்கிற்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் கூடியிருப்பதை காட்டும் காணொலி அது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டதாகக் கூறும் எந்த ஒரு செய்தியும் கூகுள் கீவர்ட் சர்ச்சில் கிடைக்கவில்லை. தொடர்ந்து, வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் “RIP #ZubeenGarg” என்ற தலைப்புடன் வைரலாகும் அதே காணொலி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி அன்று, பாடகர் ஜுபீன் கார்க் சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அவரது இறுதிச் சடங்கு அசாமின் குவஹாத்தியில் நடத்தப்பட்டது.
இந்த வைரல் காணொலியை நாகாலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வி அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் செப்டம்பர் 21ஆம் தேதி பகிர்ந்துள்ளார். அந்த காணொலியின் 0:25 முதல் 0:30 வரையிலான பகுதியில் வைரலாகும் அதே பகுதியை காணலாம்.
"ஜெய் ஜூபின் டா... அன்பின் பெருங்கடல், உணர்ச்சிகளின் கடல்... அசாமின் இதயத்துடிப்பான ஜூபின் கார்க்கிற்கு கண்ணீர் மல்க விடைபெற ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். உங்கள் குரல் எங்கள் இதயங்களில் என்றென்றும் எதிரொலிக்கும்" என்று எக்ஸ் பதிவின் தலைப்பு கூறுகிறது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் பாஜக வெற்றிக்குப் பிறகு பீகாரில் நடந்த ஆர்ப்பாட்டங்களைக் காட்டுவதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் காணொலி உண்மையில் பாடகர் ஜூபீன் கார்க்கிற்கு நடைபெற்ற இறுதி மரியாதையின் போது எடுக்கப்பட்டது.