Fact Check: தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளதா? உண்மை என்ன

தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 5 லட்சம் பேருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு நேரடியாக நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது
Fact Check: தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளதா? உண்மை என்ன
fifthestatedigital1
Published on
1 min read

தமிழ்நாட்டில் நேற்று (ஆகஸ்ட் 4) தவெக அரசால்  தாக்கல் செய்யப்பட்ட 2026-2027ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகத் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றன

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் திரித்து வெளியிடபட்டுள்ளது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தமிழ்நாடு பட்ஜெட்டில் இது போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா என்று தேடுகையில், தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027-ன் படி, 2031ஆம் ஆண்டிற்குள் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ (ITI) கல்வி நிறுவனங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சி மட்டுமே வழங்கப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பதிவை TNDIPR என்ற தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிடபட்டுள்ளது. இதனை வெளிச்சம் மற்றும் NewsTamil 24x7 ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மேலும், 5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்று அரசாங்கம் எங்குமே அறிவிக்கவில்லை என்பதையும், சில சமூக வலைதளப் பக்கங்கள் பொதுமக்களைக் திசைதிருப்பும் நோக்கில் இந்தச் செய்தியைத் திரித்துத் தவறாகப் பரப்பி வருவதையும் அந்தப் பதிவு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

Conclusion:

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிதி நிலை அறிக்கை அறிவிப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் என்று தவறாகப் புரிந்துகொண்டு வதருவோர் பரப்பும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை வளர்க்கும் ஒரு கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த திட்டத்தை வேலைவாய்ப்பாக மாற்றித் திரித்து வெளியிடப்பட்டுள்ளது.

logo
South Check
southcheck.in