“பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...உபிஸ் - ஒரு சொட்டு கூட தேங்கவில்லை” என்ற கேப்ஷனுடன் பேருந்து ஒன்றின் முன் பகுதி தண்ணீரில் கவிழ்ந்து கிடப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சமீபத்திய சென்னை வெள்ளத்தில் திமுக ஆட்சியின் போது நடைபெற்றதாக பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி Tamil WhatsApp Status Creator என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி பதிவாகியுள்ளது. அதில், “சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக கவிழ்ந்து விழுந்த பேருந்து” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
பதிவிடப்பட்ட வருடத்தைக் கொண்டு இது பழையது என்பது உறுதியாகிறது. மேலும், 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவில், சமீபத்திய சென்னை வெள்ளத்தின் போது பேருந்து கவிழ்ந்ததாக வைரலாகும் காணொலி பழையது என்றும் அச்சமயம் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.