
“இறைச்சிக்கு நடுவே தன் தாயின் தலையை கண்டுகொண்ட பசுங்கன்று” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், கன்று குட்டி ஒன்று இறைச்சி கடையில் தொங்கக்கூடிய தனது தாயின் தலையை பார்த்து கண்ணீர் வடிப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதனை உண்மை என்று கூறி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
குறிப்பு: இதில் இடம்பெற்றுள்ள காணொலி சங்கடத்தை தரலாம். கவனமாக இருக்கவும்.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, GuptAnimation மற்றும் Challenge Mode என்ற AI தொழில்நுட்ப காணொலிகளை உருவாக்கி வெளியிடக்கூடிய யூடியூப் சேனல்களில் வைரலாகும் காணொலியைப் போன்ற அதே காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலியும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவருகிறது.
தொடர்ந்து, வைரலாகும் காணொலியை DeepFake-O-Meter என்ற AI காணொலிகளை கண்டறியும் இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, நான்கு டிடெக்டர்களில் இரண்டு டிடெக்டர்களில் 58% முதல் 100% வரை வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவை தந்தது. மீதம் உள்ள இரண்டு டிடெக்டர்களில் 31% முதல் 47% வரை இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவை தந்தன. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலியும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்று உறுதிப்படுத்த முடிந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இறைச்சிக் கடையில் தொங்கக்கூடிய தாயைப் பார்த்து கன்று ஒன்று அழுததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.