Fact Check: நெடுஞ்சாலையில் உள்ள பெயர் பலகையில் மோதியபடி கார் விபத்துக்குள்ளானதா? உண்மை என்ன

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெயர் பலகையில் மோதி அங்கேயே தொங்கியபடி கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
Fact Check: நெடுஞ்சாலையில் உள்ள பெயர் பலகையில் மோதியபடி கார் விபத்துக்குள்ளானதா? உண்மை என்ன
fifthestatedigital1
Published on
1 min read

கார் ஒன்று நெடுஞ்சாலையில் உள்ள பெயர் பலகையில் மோதி அங்கே தொங்கியபடி நிற்பது போன்ற காணொலி ஒன்று உண்மை என்ற கோணத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. 

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை அறிய அதில் குறிப்பிடப்பட்டுள்ள “Exit 22 on NH-48” என்ற தேசிய நெடுஞ்சாலையில் இது போன்றதொரு விபத்து ஏற்பட்டதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

தொடர்ந்து காணொலியை ஆய்வு செய்கையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள் சரிவர எழுதப்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனைக் கொண்டு இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து, வைரலாகும் காணொலியை Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்து இது 78.1% ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்ற முடிவைத் தந்தது.

Conclusion:

நம் தேடலில் முடிவாக நெடுஞ்சாலையில் உள்ள பெயர் பலகையில் சொருகியபடி கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

logo
South Check
southcheck.in