Fact Check: சேலம் தவெக மாநாட்டிற்கு கார்கள் அணிவகுத்து வந்ததா? உண்மை என்ன

தவெகாவின் மாநாடிற்கு சேலத்தில் அணிவகுத்து வந்த வாகனங்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
Fact Check: சேலம் தவெக மாநாட்டிற்கு கார்கள் அணிவகுத்து வந்ததா? உண்மை என்ன
fifthestatedigital1
Published on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் பிரசாரக் கூட்டம் சேலத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, மாநாட்டிற்கு அணிவகுத்த வாகனங்கள் என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.

Fact check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்றும் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஜனவரி 13ஆம் தேதி, shyam_ki_deewani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியை Nirmal choudhary என்பவரை டேக் செய்து பதிவிடப்பட்டுள்ளது. தவெக பிரச்சாரம் நடைபெற்ற நாள் பிப்ரவரி 13ஆம் தேதி. ஆனால், இது அதற்கு முன்பாகவே பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தேடுகையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி Nirmal choudharyயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தன்னை ராஜஸ்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற நாள் - பிப்ரவரி 13, 2026. ஆனால் வைரலாகும் காணொலி கடந்த மாதத்தில் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in