ஆமை வடிவ கேக் வெட்டினாரா நாம் தமிழர் கட்சியின் சீமான்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆமை வடிவிலான கேக் வெட்டினார் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சீமான் ஆமை வடிவிலான கேக் வெட்டியதாக வைரலாகும் புகைப்படம்
சீமான் ஆமை வடிவிலான கேக் வெட்டியதாக வைரலாகும் புகைப்படம்

“தமிழ் கலாச்சார படி கேக் வெட்டி கொண்டாடிய தமிழர்..!! அதுல பாருங்க அந்த கேக் தான் ஹைலைட்டே..!!” என்ற கேப்ஷனுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆமை வடிவிலான கேக் ஒன்றை வெட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fact-check:

வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, தாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்னை போரூரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் வைரலாகும் அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதில் இருக்கும் கேக் சதுர வடிவில் உள்ளது.

வைரலாகும் புகைப்படம்
வைரலாகும் புகைப்படம்

தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்தபோது, அது எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. மேலும், அப்புகைப்படத்தில் உள்ள ஆமை வடிவிலான கேக்கினை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Pinterest இணையதளத்தில் அதே கேக்கின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

Conclusion: 

இறுதியாக, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆமை வடிவிலான கேக் வெட்டியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in