

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அருகில் இருக்கும் புகைப்படத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் #RowdyTime என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) பதிவு ஒன்று வைரலாகி வருகிறது
Fact check:
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய ஆய்வைத் தொடங்கினோம். இதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
அப்போது, ஜனவரி 02, 2026 அன்று அவர் தனது தாத்தாவும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தது உறுதியானது. ஆனால், அந்தப் பதிவில் உதயநிதி ஸ்டாலின் எந்தவிதமான வாசகத்தையும் (Caption) குறிப்பிடவில்லை. மேலும், அப்பதிவு எடிட் செய்யப்படவும் இல்லை.
உண்மையில், உதயநிதி ஸ்டாலின் தனது செல்லப் பிராணியான நாயுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும்போது மட்டுமே "RowdyTime" என்ற வாசகத்தைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த வாசகத்தை எடுத்து, முன்னாள் முதலமைச்சருடன் அவர் இருக்கும் புகைப்படத்தில் யாரோ எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து "RowdyTime" என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டதாகப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்று உறுதியாகிறது. அந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதும் தெரியவருகிறது.