Fact Check: தகாத முறையில் பெண்ணுடன் நடனமாடினாரா திமுக எம்பி ஆ. ராசா?

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா பெண்ணுடன் தகாத முறையில் நடனமாடுவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
பெண்ணுடன் நடனமாடும் ஆ. ராசா என்று வைரலாகும் காணொலி
பெண்ணுடன் நடனமாடும் ஆ. ராசா என்று வைரலாகும் காணொலி
Published on
1 min read

“இது 2ஜி திருடன் அல்ல” என்ற தகவலுடன் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா பெண் ஒருவருடன் தகாத முறையில் நடனமாடுகிறார் என்று கூறி சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. ஆ. ராசா 2ஜி ஊழல் வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரை 2ஜி திருடன் என்று குறிப்பிட்டு இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருப்பது ஆ. ராசா இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி call me Naveen 3366 என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலியின் முழுநீளப் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

புகைப்பட ஒப்பீடு
புகைப்பட ஒப்பீடு

அக்காணொலியில் நடமாடுபவரின் முகத்தையும் ஆ. ராசாவின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் வைரலாகும் காணொலியில் இருப்பது வேறு நபர் என்பது தெரியவந்தது. மேலும், இவ்வாறு பெண்ணுடன் நடனமாடும் ஆ. ராசா என்று செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா பெண் ஒருவருடன் தகாத முறையில் நடனமாடுவதாக வைரலாகும் காணொலியில் இருப்பது அவர் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in