“எந்தக் கொம்பனாலும் குறைசொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சியில் ஓடும் பஸ்” என்ற கேப்ஷனுடன் உடைந்த பேருந்தின் பின்புறம் கயிற்றால் கட்டப்பட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இப்பேருந்து தற்போதைய திமுக ஆட்சியில் இயங்குவதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் புகைப்படம் 2018 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவுவது தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் புகைப்படம் 2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மீம்ஸாக பதிவிடப்பட்டிருந்தது.
இதே புகைப்படம் namathu என்ற ப்ளாக்ஸ்பாட் இணையதளத்திலும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் புகைப்படம் 2018ஆம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பதை அறியமுடிகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் இயங்கும் பேருந்து என்று வைரலாகும் புகைப்படம் 2018ஆம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.