Fact Check: டொனால்ட் டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா? உண்மை என்ன?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
டொனால்ட் டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக வைரலாகும் புகைப்படம்
டொனால்ட் டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக வைரலாகும் புகைப்படம்
Published on
1 min read

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேரணியில் கலந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது அவரை மர்மநபர் துப்பாக்கியால் சுட்டு தாக்கினார். இதில், காதில் காயத்துடன் உயிர் தப்பினார். இந்நிலையில், “டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்” என்ற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது டிரம்பிற்கு பாதுகாப்பிற்காக வந்த பெண் பாதுகாவலரின் உடையில் இருக்கும் மடிப்பு என்பது தெரியவந்தது. இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இத்தேடலில் ABC 3340 ஊடகம் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வெளியிட்ட செய்தியில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

பாதுகாவலரின் உடையில் உள்ள மடிப்பு
பாதுகாவலரின் உடையில் உள்ள மடிப்பு

அதனை ஆய்வு செய்ததில் நெஞ்சில் குண்டு துளைத்ததாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது குண்டடிப்பட்ட துளை இல்லை, அவரை பாதுகாப்பதற்காக சூழ்ந்த பெண் காவலர் அணிந்திருந்த உடையில் ஏற்பட்ட மடிப்பு அல்லது சுருக்கம் என அறிய முடிந்தது. இதே புகைப்படத்தை AP News, CNA உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலின் முடிவில் டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது குண்டடியின் அடையாளமல்ல, அது டிரம்பை பாதுகாக்க சூழ்ந்த பெண் காவலர் அணிந்திருந்த உடையில் ஏற்பட்ட மடிப்பு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in