Fact Check: அரிக்கேன் சின்னத்தை நா.த.க-விற்கு ஒதுக்கியதா தேர்தல் ஆணையம்?

கரும்பு விவசாயி சின்னம் கைநழுவிய நிலையில் அரிக்கேன் சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட்
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று வைரலாகும் நியூஸ் கார்ட்
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று வைரலாகும் நியூஸ் கார்ட்

“நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்” என்ற செய்தியை ஜூனியர் விகடன் வெளியிட்டதாக நேற்றைய தேதியுடன்(மார்ச் 21) நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நியூஸ் கார்டின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கியதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட்
வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட்

Fact-check:

இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் கூகுளில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் குறித்து கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இன்று(மார்ச் 22) நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், “கரும்பு விவசாயி சின்னம் கைநழுவி போன நிலையில் ஒலி வாங்கி(மைக்) சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது உறுதியாகிறது.

தொடர்ந்து, நேற்றைய தேதியில் வைரலாகும் நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று அதன் சமூக வலைதளப் பக்கங்களில் தேடியதில், நேற்று(மார்ச் 21) வைரலாகும் நியூஸ் கார்டை போன்ற செய்தி ஒன்று நாம் தமிழர் கட்சியின் சின்னம் குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது‌. அதில், “நாங்கள் எந்த சின்னத்தை கேட்டாலும், அதை வேறு கட்சிகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள்!” என்று சீமான் கூறியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் காட்டை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

மேலும், பரவி வரும் நியூஸ் கார்ட் போலி என்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் தளத்தில் நேற்று(மார்ச் 21) பதிவிட்டுள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதையும் நம்மால் ஆதாரப்பூர்வமாக கூற முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in