

தென்காசி அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான செலவுப் பட்டியல் ஒன்று அதிவேகமாகப் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பட்டியல் இது என்ற குறிப்புடன் பரவும் அந்தப் பதிவில், கும்பாபிஷேகப் பணிகளை மேற்கொண்ட சிவாச்சாரியார்களுக்கான சம்பளமாக மட்டும் ரூ.45 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check:
சாவுத்செக்கின் ஆய்வில் சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் செய்தி முபழையது என்று தெரியவந்தது.
இது குறித்த உண்மை தன்மையை அறிய இத்தகவலை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, “கா. குற்றாலநாதன்” என்ற பேஸ்புக் பயனர் இதே பதிவை 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இது பழைய பதிவு என்று தெரியவந்தது.
தொடர்ந்து தேடுகையில், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் கண்டறியும் குழுவான 'TN Fact Check' தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. பரவக்கூடிய பட்டியல் கடந்த 2025-ஆம் ஆண்டுக்குரிய பழைய தரவு என்பதும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவ்வாறான பட்டியல் ஏதும் வெளியிடபட்டுள்ளதா என்று தேடுகையில் அவாராக எவ்வித பட்டியலும் வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, தென்காசி காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக செலவு பட்டியல் என்று வைராலாகும் தகவல் கடந்த 2025-ஆம் ஆண்டில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது சமூக வலைதளங்களில் வெளியான பழைய பட்டியலாகும். தற்போதைய கும்பாபிஷேக செலவுப் பட்டியல் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அத்தகைய எந்தவொரு பட்டியலும் வெளியிடப்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.