Fact Check: மனித டி.என்.ஏ-வுடன் தவளை உருவாக்கப்பட்டதா? உண்மை அறிக
மனித டி.என்.ஏ-வில் இருந்து உருவாக்கப்பட்ட மனித உருவம் கொண்ட தவளை என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. இதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, abstractunseen என்ற Tik Tok பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு abstractunseen-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, தன்னை ஒரு Visual Effects கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மனித உருவம் கொண்ட பல்வேறு வினோத உயிரினங்களின் காணொலிகளை பதிவிடப்பட்டுள்ளனர்.
மேலும், வைரலாகும் காணொலியை DeepFake-O-Meter இன்று இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், ஆறு டிடெக்டர்களில் நான்கு டிடெக்டர்கள் 72% முதல் 100% வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மனித டி.என்.ஏ-வைக் கொண்டு மனித உருவம் கொண்ட தவளை உருவாக்கப்பட்டதாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.