Fact Check: நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தினால் அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று மாற்றப்பட்டுள்ளதா? உண்மை அறிக

பிற மாநிலத்தை போன்று பேருந்துகளில் அம்மாநிலத்தின் பெயர் இடம் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக அரசு போக்குவரத்து கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
Fact Check: நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தினால் அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று மாற்றப்பட்டுள்ளதா? உண்மை அறிக
fifthestatedigital1
Published on
1 min read

தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் "அரசு போக்குவரத்து கழகம்" என பெயர் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவது போன்று பேருந்துகளில் மாநிலத்தில் பெயர் இடம்பெறும் விதமாக "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்" என பெயர் எழுதி இயக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டி கடந்த டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தங்களது போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற பெயர் இடம் பெற்றுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் (Archive) பரப்பி வருகின்றனர். அதில் “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்” என்று பெயர் இடம் பெற்றுள்ளது.

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் உள்ளூர் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற பெயர் கடந்த ஆண்டு முதலே இருந்து வந்தது தெரிய வந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேருந்துகளின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவிடப்பட்டிருந்த அப்பேருந்தின் புகைப்படத்தில் “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - மதுரை” என்று இடம்பெற்றிருந்தது. மேலும் பேருந்தால் நண்பர்கள் என்ற ஃபேஸ்புக் குழுவிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் பொருந்திய பேருந்துகளில் புகைப்படம் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே பதிவிடப்பட்டது என்பது தெரிய வந்தது. ஆனால், நாம் தமிழர் கட்சியினரின் போராட்டம் டிசம்பர் மாதம் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலில் முடிவாக உள்ளூரில். இயங்கக்கூடிய பேருந்துகளில் 2024ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. மேலும், நாம் தமிழர் கட்சியினர் இரண்டு மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற இடம் பெயர் இடம் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர் என்பது தெரிய வருகின்றது. மேலும் அவர் போராட்டம் நடத்தது காரணமாக தற்போது வரை பெயர் மாற்றப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in