Fact Check: பாகிஸ்தானில் இந்துப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதாக வைரலாகும் காணொலி? உண்மை என்ன?

பாகிஸ்தானில் இந்துப் பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
பாகிஸ்தானில் இந்து பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதாக வைரலாகும் காணொலி
பாகிஸ்தானில் இந்து பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதாக வைரலாகும் காணொலி
Published on
2 min read

குறிப்பு: மோசமான காணொலி என்பதால் அது தொடர்பான சமூக வலைதள லிங்கை இந்த கட்டுரையில் சேர்க்கவில்லை

“பாகிஸ்தானில், 

இந்து சகோதரிகள் மற்றும் மகள்களை முஸ்லிம்கள் நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம் போகச் செய்தனர்… பகிர வேண்டும். நிறுத்த வேண்டாம் நண்பர்களே” என்ற தகவலுடன் வாட்ஸ்அப்பில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சில ஆண்கள் இரு பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அரை நிர்வாணப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. 

மேலும், காணொலியில் “அப்பெண்களை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அதனை காவல்துறையினரிடம் புகார் அளிக்க சென்றபோது இவ்வாறாக நடைபெற்றதாகவும்” ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் காணொலி தவறான நோக்கத்துடன் பகிரப்படுவது தெரியவந்தது. இக்காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி News 18 Hindi வைரலாகும் காணொலியில் உள்ள பகுதியுடன் செய்தியை வெளியிட்டு இருந்தது. அதில், “பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் உள்ள கடையில் திருட வந்ததாக நான்கு பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, NDTV 2021ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், “இச்சம்பவத்தின் சில காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

“இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து முக்கிய குற்றவாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று பஞ்சாப் காவல்துறை செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று (டிசம்பர் 7, 2021) ட்வீட்டில்(தற்போது எக்ஸ்) தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் ஐந்து சந்தேக நபர்கள் மற்றும் பலருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின்படி, அவர்கள் பைசலாபாத்தில் உள்ள பாவா சவுக் சந்தைக்கு கழிவுகளை சேகரிக்கச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் கூறினார். அதன்படி: தண்ணீர் தாகம் எடுத்த நாங்கள் உஸ்மான் எலக்ட்ரிக் ஸ்டோருக்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால், அதன் உரிமையாளர் சதாம் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டினார். சதாமும் மற்றவர்களும் எங்களை அடிக்கத் தொடங்கினர். பின்னர் அவர்கள் எங்களது ஆடைகளை அவிழ்த்து, இழுத்து, அடித்தனர். எங்களது ஆடைகள் அவிழ்க்கப்படுவதை காணொலியாகவும் பதிவும் செய்துள்ளனர்... கூட்டத்தில் இருந்த யாரும் குற்றவாளிகளை தடுக்க முயற்சிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை The Print ஊடகமும் வெளியிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ அல்லது அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பது போன்ற விவரங்களையோ எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பாகிஸ்தானில் இந்துப் பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை இல்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in