Fact Check: தமிழ்நாட்டில் மகளிர் இலவசப் பேருந்தில் பெண்கள் சண்டையிட்டுத் தாக்கியதாகப் பரவும் காணொலியின் உண்மைப் பின்னணி?

தமிழ்நாட்டின் "வெற்றிப் பயணத் திட்டம்" பேருந்தில் இருக்கைக்காகப் பெண்கள் மோதிக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொலி
Fact Check: தமிழ்நாட்டில் மகளிர் இலவசப் பேருந்தில் பெண்கள் சண்டையிட்டுத் தாக்கியதாகப் பரவும் காணொலியின் உண்மைப் பின்னணி?
fifthestatedigital1
Published on: 
1 min read

அரசுப் பேருந்து ஒன்றிற்குள் பெண்கள் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி, சண்டையிட்டுக்கொள்ளும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவுகளில், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைக் குறிப்பாக "வெற்றிப் பயணத் திட்டம்" என்று மறைமுகமாகக் குறிப்பிட்டு, இலவசப் பேருந்தில் இருக்கையைப் பிடிப்பதற்காகப் பெண்கள் இவ்வாறு சண்டையிடுகிறார்கள் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் கானொலியில் உள்ள சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றது என்று தெரியவந்தது.

இந்த காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, TV5 News மற்றும் ABP நாடு போன்ற செய்தி ஊடகங்கள் யூடியூபில் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, “தெலங்கானாவில் உள்ள பர்கி (Parigi) என்ற இடத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்திலேயே (TSRTC) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானாவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டமான 'மகாலட்சுமி' திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று பர்கி - ஹைதராபாத் பேருந்தில் பயணம் செய்த பெண்களுக்கு இடையே இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி பின்னர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றது” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:

தமிழ்நாட்டின் மகளிர் இலவசப் பேருந்து மற்றும் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் பெண்கள் மோதிக்கொண்டதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. தெலங்கானா மாநில அரசுப் பேருந்தில் இருக்கை தகராறில் பெண்கள் ஈடுபட்ட காணொலியைத் தவறான தகவலுடன் தமிழ்நாட்டில் நடந்ததாக வதந்தியாகப் பரப்பி வருகின்றனர்.

logo
South Check
southcheck.in