

“இந்திய அரசு புதுவருடத்தை முன்னிட்டு பட்டர் சிக்கன் சுவை கொண்ட 'சம்போக் சாத்தி' ஆணுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இவை இலவசமாக அரசு மருத்துவமனைகள் கிடைக்குமாம்.” என்ற தகவல் ஒன்று புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் நையாண்டிக்காக பகிரப்பட்ட தகவலை உண்மை என்று பகிர்ந்து வருகின்றனர் என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட்ஸ் சர்ச் செய்து பார்த்தபோது “சம்போக் சாத்தி” என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய செயலி ஆகும், இது பயனர் பாதுகாப்பை அதிகரிக்கவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக கொண்டு வரப்பட்டது. இச்செயலியை புதிய ஸ்மார்ட்போன்களில் தயாரிப்பின் போதே நிறுவ வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டு பிறகு சர்ச்சையானதும் அதனை திரும்பப்பெற்றதும் The Tribune ஊடகம் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி வாயிலாக தெரிய வந்தது.
தொடர்ந்து “சம்போக் சாத்தி” என்ற பெயரில் இந்திய அரசு பட்டர் சிக்கன் சுகையில் ஆணுரையை தயாரித்து வெளியிட்டுள்ளதா என்பது குறித்து தேடுகையில், satirelogy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக ஒரு பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
அதன்படி, “இந்திய அரசாங்கம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, "சம்போக் சாத்தி" என்று பொது சுகாதார முயற்சியின் கீழ் பட்டர் சிக்கன் மசாலா-சுவை கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பாதுகாப்பான மற்றும் பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதோடு, பாதுகாப்பை பொதுமக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரையறுக்கப்பட்ட பதிப்பு ஆணுறைகள் இலவசமாக விநியோகிக்கப்படும், மேலும் பண்டிகைக் காலத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிலேயே “இது உண்மையான செய்தி அல்ல, இது முற்றிலும் நையாண்டி பதிவு. இந்தப் பதிவு பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்திய அரசு புத்தாண்டை முன்னிட்டு பட்டர் சிக்கன் சுவை கொண்ட 'சம்போக் சாத்தி' ஆணுறைகளை அறிமுகப்படுத்தியுள்றது என்றும் அவை இலவசமாக அரசு மருத்துவமனைகள் கிடைக்கும் என்றும் வைரலாகும் தகவல் நையாண்டியாக பகிரப்பட்டது என்றும் அதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர் எனவும் தெரியவந்தது.