

2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு நேற்று (நவம்பர் 11) வெளியிட்டது . அதில், தெலுங்கு வருடபிறப்பிற்ப்பான 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி விடுமுறை என்று அறிவித்துருந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தெலுங்கு வருடபிறப்பிற்கு எதற்கு விடுமுறை என்றும் திமுக ஆட்சியில் தெலுங்கு வருடப்பிற்கு விடுமுறை என்றும் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டை வலது சாரிகள் முன் வைப்பது வழக்கம். இந்நிலையில், தெலுங்கு வருடப் பிறப்பிற்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்துள்ள தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அதிமுக ஆட்சியிலும் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெற்ற போது பொது விடுமுறை குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தி இந்து ஊடகம் விடுமுறை தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது.
அதன்படி, 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது தெரியவந்தது. அதே போன்று அதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டும் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் திமுக ஆட்சியில் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் 2019ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியிலும் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரியவந்தது.