

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் செந்தில்வேல் மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தின் முன்பாக திமுக கொடியின் நிறத்தில் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து நின்று கொண்டு போஸ் கொடுப்பதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் இப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ஊடகவியலாளர் செந்தில் வேல் கடந்த ஜனவரி 23ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அதில் அடர் சாம்பல் நிற சட்டை மற்றும் லேசான சாம்பல் நிற பேண்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தொடர்ந்து வைரலாகும் புகைப்படத்தை போட்டோ Photo Forensic இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது அது எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டு ஊடகவியலாளர் செந்தில்வேல் மலேசியாவின் இரட்டை கோபுரத்தின் முன்பாக திமுக கொடியின் நிறத்தில் உடை அணிந்து நிற்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.