Fact Check: தமிழக முதல்வர் குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்டதா ஜூனியர் விகடன் ஊடகம்?

தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினை கேலி செய்து விகடன் ஊடகம் கருத்து சித்திரம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது
Fact Check: தமிழக முதல்வர் குறித்து  கேலிச் சித்திரம் வெளியிட்டதா ஜூனியர் விகடன் ஊடகம்?
Published on
1 min read

ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அப்படத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகாயத்திலிருந்து விழுவது போன்றும், அவருக்கு அருகில் காற்று இறங்கிய பலூன் ஒன்று பறப்பது போன்றும் ஒரு கேலிச் சித்திரம் இடம்பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் தற்போது உடைந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் இந்த அட்டைப்படத்தை ஜூனியர் விகடன் சமீபத்தில் வெளியிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இத்தகவலின் உண்மைத்தன்மையை அறிய ஜூனியர் விகடன் இதழின் பழைய பதிப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது ஜூனியர் விகடன் இதழின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அசல் அட்டைப்படம் கண்டறியப்பட்டது. வைரலாகும் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் இதழ் எண் (Volume 40 Issue 72) ஆகியவை அந்தப் பழைய இதழோடு சரியாகப் பொருந்துகிறது.

உண்மையில் அந்த அசல் அட்டைப்படத்தில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் வானத்திலிருந்து விழுவது போன்ற கேலிச் சித்திரம் தான் இடம்பெற்றிருந்தது. மேலும் அந்தப் பதிவில் ஜூனியர் விகடன் நிறுவனம் அண்ணாமலையை நேரடியாகக் குறிப்பிட்டு ‘Tag’ செய்திருப்பதையும் காண முடிகிறது.

இதிலிருந்து அண்ணாமலை குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் விகடன் வெளியிட்ட கேலிச் சித்திரத்தை யாரோ மர்ம நபர்கள் டிஜிட்டல் முறையில் எடிட் செய்து, முதல்வர் ஸ்டாலின் முகத்தைப் பொருத்தித் தவறாகப் பரப்பி வருவது உறுதியாகிறது.

Conclusion:

முடிவாக, தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து ஜூனியர் விகடன் 2022ல் வெளியிட்ட பழைய அட்டைப்பட கேலிச் சித்திரத்தை போலியாக எடிட் செய்து, அது முதல்வர் ஸ்டாலின் குறித்து சமீபத்தில் வெளியான இதழ் எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in