Fact Check: கலைஞர் கருணாநிதிக்கும் நடிகர் செந்தாமரை மனைவி ராசாத்திக்கும் பிறந்தவரா கனிமொழி? உண்மை என்ன

நடிகர் செந்தாமரையின் மனைவி ராசாத்திக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்தவர் தான் எம்.பி கனிமொழி என்று சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வைரலாகும் தகவல்
நடிகரின் மனைவிக்கு பிறந்தவர் கனிமொழி எம்.பி.
நடிகரின் மனைவிக்கு பிறந்தவர் கனிமொழி எம்.பி.
Published on
2 min read

“எங்கள் திராவிட குடும்ப கும்பல் எப்படிப்பட்டதுன்னு இந்த ஒத்த புகைப்படம் சொல்லும்..இப்படிக்கு மு.கனிமொழி. நடிகர் செந்தாமரை மனைவி..ராசாத்தி.. ஆனால் ராசாத்தி மகள் கனிமொழி க்கு தந்தை கருணாநிதி... புரியுதா” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படத்துடன் கூடிய தகவல் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரையின் மனைவி ராசாத்தி என்றும் ராசாத்திக்கும் கருணாநிதிக்கும் பிறந்தவர் தான் எம்.பி கனிமொழி என்றும் கூறி பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செந்தாமரை அவரது மனைவி கௌசல்யா செந்தாமரை மற்றும் அவர்களது மகள் ராஜலட்சுமி ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.

புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து ஆய்வு செய்தோம். அப்போது, வைரலாகும் புகைப்படத்துடன் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி Behind Talkies என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், பிரபல நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா செந்தாமரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியலில் யுவராணி என்ற கதாபாத்திரத்திற்கு அம்மாவாக கௌசல்யா நடித்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Behind Talkies வெளியிட்டுள்ள செய்தி
Behind Talkies வெளியிட்டுள்ள செய்தி

மேலும், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி One India Tamil வைரலாகும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள செய்தியின்படியும் நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா செந்தாமரை என்பது உறுதியாகிறது. தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தில் இருக்கக்கூடிய சிறுமி செந்தாமரை மற்றும் கௌசல்யாவிற்கு பிறந்த மகள் ராஜலட்சுமி என்று IndiaGlitz Tamil யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள ராஜலட்சுமியின் பேட்டி வாயிலாக தெரியவருகிறது. அதிலும் வைரலாகக்கூடிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நடிகர் செந்தாமரையின் மனைவி ராசாத்தி என்றும் ராசாத்திக்கும் கருணாநிதிக்கும் பிறந்தவர் கனிமொழி எம்.பி என்று வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் புகைப்படத்தில் இருப்பது நடிகர் செந்தாமரை - கௌசல்யா செந்தாமரை மற்றும் அவர்களது மகள் ராஜலட்சுமி என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in