
ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளில் இருந்து காசாவிற்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளை சுமார் மூன்று மாதங்களுக்கு இஸ்ரேல் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட 12 சமூக ஆர்வலர்கள் நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பலில் காசாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பெர்க் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டார். இதனை இஸ்ரேல் உடனடியாக மறுத்தது.
இந்நிலையில், “இஸ்ரேலியர்கள் கிரேட்டா தன்பெர்க் சென்ற கப்பலை தாக்கியதை கேள்விப்பட்ட கிம் அழுக ஆரம்பித்து விட்டார். அவருக்கு எதாவது நேர்ந்தால் டெல் அவிவ் இருக்காது என்று கூறினார்” என்ற தகவலுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழுகக்கூடிய காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் (Archive) பலரும் பகிர்ந்து வருகின்றனர்.ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளில் இருந்து காசாவிற்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளை சுமார் மூன்று மாதங்களுக்கு இஸ்ரேல் நிறுத்தி வைத்தது.
Fact Check:
சவுத் செக்கிங் ஆய்வில் அவர் வடகொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்ததற்காக அழுதது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி Independent ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வட கொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைத் தடுக்க அதிக குழந்தைகளைப் பெறுமாறு பெண்களிடம் வலியுறுத்தியபோது கிம் ஜாங் உன் கண்ணீர் வடித்தார். தேசிய தாய்மார்கள் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் கிம் தனது கைக்குட்டையால் கண்ணீரைத் துடைப்பதைக் காண முடிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், The Telegraph ஊடகமும் தனது யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டு, வடகொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை தடுக்க, அதிக குழந்தைகளைப் பெறுமாறு கிம் ஜாங் உன் பெண்களிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை Hindustan Times ஊடகம் விரிவான செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கிரேட்டா தன்பெர்க் சென்ற கப்பலை இஸ்ரேலியர்கள் தாக்கியதை கேள்விப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழுததாக வைரலாகும் காணொலி தவறானது, உண்மையில் அவர் வடகொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்ததற்காகவே அழுதார் என்று தெரியவந்தது.