Fact Check: லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதி ஷபீர் அகமது லோன் கைது செய்யப்பட்டது திருப்பூரிலா?

திருப்பூரில் லஷ்கர்-இ-தைபா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஷபீர் அகமது லோன் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்
Fact Check: லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதி ஷபீர் அகமது லோன் கைது செய்யப்பட்டது திருப்பூரிலா?
fifthestatedigital1
Published on
1 min read

லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி ஷபீர் அகமது லோனை திருப்பூரில் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.

இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து விரிவான ஆய்வு செய்ததில் இதுகுறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையில், லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஷபீர் அகமது லோன் என்பவரை மார்ச் 30, 2026 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் டெல்லியின் காசிப்பூர் பகுதியில் வைத்துதான் கைது செய்தனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்ட தேசவிரோத போஸ்டர்கள் மற்றும் சமீபகாலமாக கண்டறியப்பட்ட பயங்கரவாத கும்பலை இயக்கிய முக்கிய குற்றவாளியாக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று Times of India ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் திருப்பூரில் ஏற்கனவே நடந்த ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பப்படுகிறது. கடந்த பிப்ரவரி 21 அன்று திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வந்த 6 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை பேரை டெல்லி போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால், அது வேறுரொரு சம்பவத்துடன் தொடர்புடையது.

Conclusion:

எனவே, டெல்லியில் நடைபெற்ற இந்த முக்கியமான கைதை, திருப்பூரில் நடந்ததாகத் திரித்துக் கூறுவது முற்றிலும் தவறானது. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளை ஒன்றாக இணைத்து, பொதுமக்களைத் திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in